கரடியனாறில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சாரதிகள் கைது!!!

Published By: Digital Desk 7

23 Jan, 2018 | 12:45 PM
image

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு உழவு இயந்திரங்கள் மணல் ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் கைப்பற்றப்பட்டதுடன் எட்டு சாரதிகளும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சாரதிகளிடம் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  குழுவினர் முந்தன் குமாரவெளி ஆற்றிற்குள்  மணல் அகழ்வில் ஈடுபட்ட  ஆறு உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். 

இதேவேளை புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்ந்த சாரதிகளும் உழவு இயந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சாரதிகள் எட்டு பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்ட சாரதிகளை நாளை  ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33