"பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிக்கிறது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்காவே நடவடிக்கை எடுக்கும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் எச்சரித்து வருகிறார்.

பாகிஸ்தானுக்கு 1,600 ரூபா கோடி இராணுவ நிதியுதவியையும் ட்ரம்ப் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நேற்று பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி 

"அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அமெரிக்காவில் நிவ்யோர்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது அந்த நேரத்தில் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி இருந்திருந்தால் நிலைமைகள் வேறு மாதிரி இருந்திருக்கும்". என்று கூறினார்