கொழும்பு ஸ்மார்ட் நக­ர­மாக மாற்­றுமா.?

Published By: Robert

23 Jan, 2018 | 12:43 PM
image

கொழும்பு நகரின் ஆட்சி அதி­கா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பெற்று தந்தால் மேய­ராக இருந்து கொழும்பு நகரை பசு­மை­மிக்க ஸ்மார்ட் நக­ர­மாக மாற்­றி­ய­மைப்பேன் என கொழும்பு மாந­கர சபைக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் மேயர் வேட்­பாளர் ரோஸி சேன­நா­யக்க தெரி­வித்தார்.

நாம் மாந­கர சபையின் ஆட்­சியை பெற்­ற­வுடன் வெள்ளத்தில் மூழ்­காத நக­ர­மாக கொழும்பு மாந­கர சபையை மாற்­றி­ய­மைப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தெமட்­ட­கொடை – குப்பி­யா­வத்­தையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கொழும்பு நக­ரி­லுள்ள உட்­கட்­ட­மைப்பு, வீதி பிரச்­சினை, வீட­மைப்பு பிரச்­சினை ஆகியவற்றுக்கு உரிய தீர்­வினை நாம் பெற்­று­த் த­ருவோம். கொழும்பு நகரில் மேலும் 25 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிப்போம். 

தற்­போது ெவள்ளத்­தினால் கொழும்பு நகரம் மூழ்கும் அபாயம் உள்­ளது. தற்­போ­தைக்கு பல தடவை ெவள்ளத்தில் மூழ்­கி­யது. இந்­நி­லையில் நாம் மாந­கர சபையின் ஆட்­சியை பெற்­ற­வுடன் ெவள்ளத்தில் மூழ்­காத நக­ர­மாக கொழும்பு மாந­கர சபையை மாற்­றி­ய­மைப்போம். 

மேலும் கொழும்பு மாந­கர சபையில் காணப்­படும் குப்பை பிரச்­சி­னைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போ­தைக்கு தீர்வு வழங்­கி­யுள்ளார். இதன்­படி புத்­த­ளத்தில் குப்பை முகா­மைத்­துவம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு அப்பால் மாந­கர சபை என்ற வகையில் குப்பை பெற்­றுக்­கொள்ளும் நேரத்தை முகா­மைத்­துவம் செய்வோம்.

அத்­துடன் தற்­போது வரிப்­பணம் செலுத்தும் போது சேவையை பெற்­றுக்­கொள்­வதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. இதனை இல்லாமல் செய்­வ­தற்கு நவீன தொழில்­நுட்பத்தை  கொண்டு வருவோம். கொழும்பு நகரின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்று தந்தால் மேயராக இருந்து கொழும்பு நகரை பசுமையான ஸ்மார்ட்நகரமாக மாற்றியமைப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08