பாதுகாப்புத்துறையில் விரைவில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியாவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன. இதற்காக இருநாடுகளும் இணைந்து செயற்பட புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.