மாலபே நிவாஸி வீடமைப்புத் திட்டம் மார்சில்  பூர்த்தி

Published By: Priyatharshan

23 Jan, 2018 | 10:04 AM
image

ஓர்கிட் செயற்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மாலபே பகுதியில் அமைந்துள்ள மாபெரும் இல்லங்கள் மற்றும் தொடர்மனைகளை கொண்ட தொடராக அமைந்துள்ளது. 

இறுதிக்கட்டத்தில் 160 அலகு 12 அடுக்கு தொடர்மனைகள் அடங்கியுள்ளன. இது மாதத்தின் சிறந்த செயற்திட்டமாக LankaPropertyWeb.com இனால் இனங்காணப்பட்டிருந்தது.

முழுச்செயற்திட்டமும் முன்னணி வீடமைப்பு நிறுவனமான நிவாஸி டிவலபர்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான புகழ்பெற்ற ஒப்பந்தக்காரரான இன்டர்நஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) மூலமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன் மொத்தமாக 170 இல்லங்கள் மற்றும் இரு தொடர்மனை குடியிருப்புத்தொகுதிகளையும் கொண்டுள்ளது. 

இதில் 94 மற்றும் 160 அலகுகள் மொத்தமாக காணப்படுகின்றன. இதில் மூன்று பாரிய தனித்தனியான நீச்சல் தடாகங்கள், இரு நடை பகுதிகள், இரு பாரிய குளங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி மற்றும் பசுமையான நெல் வயல் பகுதிகள் போன்றன அடங்கியுள்ளன.

வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் மத்தியில் பெருமளவு விற்பனையை பதிவு செய்துள்ளதுடன் மாலபே பகுதியை அண்மித்து பல வைத்தியசாலைகள் மற்றும் இதர சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுகின்றமை இதில் பங்களிப்பு வழங்கியிருந்தது. குறிப்பாக வைத்தியர் நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலை, Millennium IT, Horizon Campus, SAITM, CINEC Campus, SLIIT போன்ற பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. நகரின் நெரிசல் நிறைந்த பகுதியிலிருந்து அமைதியான சூழலில் குடியேறுவதற்கு இந்த குடியிருப்புத்தொகுதி மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன் நகரை அண்மித்ததாகவும் அமைந்துள்ளது. 

மட்டுப்படுத்தப்பட்டளவு தொடர்மனைகள் காணப்படுவதுடன் இவற்றில் முதலீடுகளை இலகுவாக மேற்கொள்வதற்காக முன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான கொடுப்பனவு திட்டங்களை வழங்குகின்றன.

இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பிரேரிக்கப்பட்டுள்ள வரி போன்றவற்றின் காரணமாக இந்த சொத்துக்களின் பெறுமதி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மாலபே, பெருமளவு பசுமையான சூழலையும் பசுமையான காற்று, குறைந்த ஒலி இரைச்சல் மற்றும் ஓய்வான சூழலை கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இந்நகரம் பல வணிக மற்றும் குடியிருப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை எதிர்கொண்டிருந்தது. வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு இலகுவாக பயணிக்கக்கூடிய வாய்ப்புகளை கொண்டுள்ளது.

உயரமான கட்டிடங்களின் மூலமாக உரிமையாளர்களுக்கு சுற்றுப்புறசூழலை பார்வையிட சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர்மனைகள் அனைத்தும் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் வசதிகளை கொண்டுள்ளன. இதில் காஸ், தொலைபேசி மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள், சமையலறை பான்ட்ரி, புகை மற்றும் வெப்ப உணரிகள், LED விளக்குகள், வாயு குளிரூட்டிகளை பொருத்துவதற்கான வசதி மற்றும் இலவச தரிப்பிட வசதி போன்றவற்றுடன் இதர பல உள்ளம்சங்களும் காணப்படுகின்றன. இதில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகட்டல் வசதிகள் மற்றும் தோட்டச்செய்கை போன்றனவும் அடங்கியுள்ளன.

ஓர்கிட் திட்டம் நிசாஸி டிவலபர்ஸ் மாலபே பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழ் காணப்படுவதுடன் கண்கவர் 22 ஏக்கர் பகுதியில் அமைந்துள்ளது.

இதை முன்னணி சொத்துக்கள் விற்பனை இணையத்தளமான Lamudi, ‘The Modern Village in Malabe’ என பட்டியலிட்டுள்ளது.

நிவாஸி மற்றும் ICC ஆகியன இணைந்து வெவ்வேறு செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. இதனூடாக நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித்துறையில் மைல்கல் சாதனைகளை படைத்துள்ளது. 35 வருட கால சிறந்த பரந்தளவு அனுபவத்தினூடாக, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக ICC புகழ்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57