வாக்­கு­க­ளுக்கு விலை­பே­சும் வேட்­பா­ளர்­கள்

Published By: Robert

23 Jan, 2018 | 12:30 PM
image

கப­டத்­த­ன­மாக சம்­பா­தித்த பணத்தின் மூல­மாக புத்­த­ளத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியை குத்­த­கைக்கு எடுத்­த­வர்கள், இப்­போது மக்­களின் வாக்­கு­க­ளுக்கு விலை­பேசிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்தப் பணத்­துக்­காக புத்­தளம் மக்கள், தங்­களின் சுய­கெ­ள­ரவம், தன்­மானம் என்­ப­வற்றை இழக்­க­மாட்­டார்கள் என்­பதை தேர்தல் முடி­வு­களில் வெளிப்­ப­டுத்­து­வார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

Image result for ரவூப் ஹக்கீம் virakesari

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து 19  ஆம் திகதி புத்­த­ளத்தில் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது,

ஐக்­கிய தேசியக் கட்சி மீது இப்­போது மோச­மான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.  தனக்­கென பணம் சம்­பா­திக்­காத தலை­மைகள் தான் ஐ.தே.கவில் இருந்­துள்­ளன. டட்லி சேனா­நா­யக்க மர­ணித்­த­போது அவ­ரு­டைய வங்கி கணக்கில் 1500 ரூபா மாத்­தி­ரமே இருந்­தது என்று ஐ.தே.கட்­சிக்­கா­ரர்கள் பெரு­மைப்­ப­டு­கின்­றனர். ஜே.ஆர். ஜய­வர்­தன தனது மர­ணத்தின் பின் அனைத்து சொத்­து­க­ளையும் பொதுத் தேவைக்­காக எழு­திக்­கொ­டுத்தார்.

இப்­ப­டி­யான கட்­சியைச் சேர்ந்த உள்ளூர் அர­சி­யல்­வா­திகள், இப்­போது பணத்­துக்­காக புத்­த­ளத்தில் கட்­சியை குத்­த­கைக்கு விட்­டுள்­ளனர். புத்­த­ளத்தில் எங்­க­ளுடன் சேர்ந்து போட்­டி­யி­டு­வ­தற்கு ஐ.தே.க. விரும்­பி­ய­போதும், அதன் உள்ளூர் தலை­மைகள் விரும்­ப­வில்லை. 

மக்­களை விலைக்கு வாங்கும் வங்­கு­ரோத்து அர­சி­ய­லுக்கு புத்­தளம் மக்கள் ஒரு­போதும் சோரம்­போ­க­மாட்­டார்கள் என்­பதை இங்கு வந்­திருப்­ப­வர்­களே கட்­டியம் கூறு­கின்­றனர். கப­டத்­த­ன­மாக சம்­பா­தித்த பணத்தை வைத்­துக்­கொண்டு புத்­தளம் மக்­களின் தன்­மா­னத்தை பேரம்­பே­சு­வது அவர்­களின் இய­லா­மை­யையே காட்­டு­கி­றது. சில ஆயிரம் வாக்­குகளை விலைக்கு வாங்கி, தன்னை தேசிய தலை­வ­ராக காட்­டிக்­கொள்ளும் கனவில் மிதந்­து­கொண்­டி­ருக்கும் அர­சி­யல்­வா­தியின் அட்­டகாசம் முடி­வுக்கு வர­வேண்­டுமா? -இல்­லையா? என்­பதை சந்­திக்கும் நேரம் வந்­து­விட்­டது. 

நஞ்சுப் போத்­தலை வைத்­துக்­கொண்டு பயம்­காட்டி, அர­சி­ய­லுக்கு வந்­த­வர்கள் இப்­போது தம்­பி­மாரை வைத்து, மக்­களை மாத்­தி­ர­மின்றி ஏனைய கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளையும் விலைக்கு வாங்­கு­கின்ற கேவலம் இந்த மண்ணில் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. செல்­கின்ற இடங்­களில் எல்லாம் பணத்தை வாரி­யி­றைத்து ஆச­னங்­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்று மனக்­கோட்டை கட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இதற்கு மக்கள் பதில் சொல்­ல­வேண்­டிய காலம் இப்­போது வந்­து­விட்­டது.

மறைந்த தலைவர் அஷ்­ரஃபின் சக­வா­சமே இல்­லாத வன்னி அமைச்சர், அவ­ருடன் வாழ்ந்­த­து­போல காட்­டிக்­கொண்டு, அவரின் படங்­க­ளையும் சேர்த்து பிர­சு­ரங்­களை வெளி­யி­டு­வது நகைப்­புக்­கு­ரிய விடயம். அஷ்­ரஃபின் மகோன்­னத அர­சியல் தெரி­யாத இவர்‌கள் மேடை­களில் ஏறிக்­கொண்டு, அவரின் அர­சி­யலைப் பற்றி ஏங்கி, ஏங்கி பேசித்­தி­ரி­கின்­றனர். இப்­ப­டியான பச்­சோந்தி அர­சி­யல்­வா­தி­களின் விலை­பே­ச­லுக்கு உண்­மை­யான போரா­ளிகள் யாரும் சோரம்­போக மாட்­டார்கள்.

புத்­த­ளத்தில் பாரிய கழி­வுநீர் முகா­மைத்­துவ தொகு­தியை அமைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெறப்­பட்டு, சீன வங்­கி­யொன்­றுடன் ஒப்­பந்தம் செய்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். புத்­தளம் மற்றும் சிலா­பத்தை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த கழி­வுநீர் முகா­மைத்­துவம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். இதனை அடுத்த வரு­டத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தீவி­ர­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம். இத்­திட்­டத்தின் மூலம் வெளி­யேற்­றப்­படும் கழி­வுநீர், நீர்­நி­லை­களில் சேராத வகையில் அகற்­றப்­படும். 

ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் 5ஆம் கட்ட நிதி­யு­த­வியின் கீழ் புத்­த­ளத்தில் குடிநீர் வழங்கல் திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இதன்­மூலம் 2 இலட்சம் பேர் சுத்­த­மான குடி­நீரை குழாய் மூலம் பெற்­றுக்­கொள்ள முடியும். 14,000 மில்­லியன் ரூபாவை கட­னு­த­வி­யாகப் பெற்று புத்­தளம் தெற்கு நீர் வழங்கல் திட்­டத்தை அமுல்­ப­டுத்­த­வுள்ளோம். இதன்­மூலம் ஆராச்­சிக்­கட்­டு பிர­தேசம் வரை இந்த குடிநீர் திட்­டத்தை விஸ்­த­ரிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

கலா ஓயாவிலிருந்து 2 இலட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்படும் நிலையில், மேலதிகமாக இன்னும் 1.5 இலட்சம் பேருக்கு குடிநீரை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இந்த வருட நிதியொதுக்கீட்டில் புத்தளம் வடிகாலமைப்புக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல அபிவிருத்தி திட்டங்களை புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37