அமெ­ரிக்க  செனட் சபை­யா­னது   வரவு–செலவுத் திட்­ட­மொன்றை   நிறை­வேற்றத் தவ­றி­யதை­ய­டுத்து அந்­நாட்டு அர­சாங்க  பணிகள் பலவும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க  செனட்­சபை இந்த ஆண்டு முழு­வ­துக்­கு­மான வர­வு­செ­லவுத் திட்டம் தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு காலக்­கெ­டு­வுக்குள் இணக்­கப்­பாட்டை எட்டத் தவ­றி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் இது தொடர்பில்  நேற்று  முன்­தினம்   ஞாயிற்­றுக்­கி­ழமை   செனட்­ச­பையின்   அவ­சரக்  கூட்­டத்­தொ­ட­ரொன்று இடம்­பெற்ற போதும்  குடி­வ­ரவு உள்­ள­டங்­க­லான விட­யங்­களில்  குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் ஜன­நாயக கட்­சி­யி­னரும் இணக்­கப்­பாடு  காணாத நிலையில் வரவு செலவுத் திட்டம் நிறை­வேற்­றப்­ப­டாது அர­சாங்க செயற்­பா­டுகள் ஸ்தம்­பி­த­ம­டையும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 இந்­நி­லையில் நேற்று திங்­கட்­கி­ழமை வேலை நாள் ஆரம்­பத்தில்  பல அர­சாங்கப் பணி­யா­ளர்கள்  தமது பணிகள் தொடர்பில்  அறிக்­கை­யிட முடி­யாத நிலைக்­குள்­ளா­னார்கள்.

 இது தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் வரை சில  அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான  ஊதியம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது எனக் கூறப்­ப­டு­கி­றது.

 இந்த ஸ்தம்­பித நிலையால்  அத்­தி­யா­வ­சிய சேவைகள் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்ற போதும்  சுதந்­திர சிலை உள்­ள­டங்­க­லான தளங்கள்  ஊழி­யர்­க­ளுக்­கான நாளாந்த கட்­ட­ணத்தை செலுத்த முடி­யா­ததால்   நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மூடப்­பட்­டன.

 இந்த சட்­ட­மூலம்  செனட்­ச­பையில்  நிறை­வேற்­றப்­பட அதன் 100  உறுப்­பி­னர்­களில் குறைந்­தது 60  உறுப்­பி­னர்கள் அதற்கு ஆத­ர­வ­ளிப்­பது அவ­சியம். ஆனால்  குடி­ய­ரசுக் கட்­சி­யினர் செனட்­ச­பையில் தற்­போது 51  உறுப்­பி­னர்­களை மட்­டுமே கொண்­டுள்ள நிலை­யில் மேற்­படி வரவு செலவுத் திட்ட சட்­ட­மூ­லத்தை  நிறை­வேற்ற  குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரின் ஆத­ரவு அவ­சி­ய­மா­கி­றது.

இந்­நி­லையில்  ஜன­நா­யகக் கட்­சி­யினர்  இந்த வரவு செல­வுத்­திட்ட உடன்­ப­டிக்­கையின் அங்­க­மா­க­வுள்ள குடி­வ­ரவு தொடர்பில் ட்ரம்­புடன்  பேச்­சு­வார்த்தை நடத்த விரும்­பு­கின்­றனர்.

 குடி­ய­ரசுக் கட்­சி­யினர்  மெக்­ஸிக்கோ எல்­லை­யி­லான தடுப்புச் சுவர், குடி­வ­ரவு சீர்­தி­ருத்தம்  மற்றும் இரா­ணுவ செல­வி­னத்தை அதி­க­ரித்தல்  உள்­ள­டங்­க­லாக  எல்லைப் பாது­காப்­பிற்­கான  நிதி­யி­டலை எதிர்­பார்த்­துள்­ளனர்.

  அமெ­ரிக்க அர­சாங்­கத்தில் ஏற்­பட்ட ஸ்தம்­பித நிலையால்  அந்­நாட்டின் வீட­மைப்பு, சுற்­றுச்­சூழல், கல்வி மற்றும் வர்த்­தக திணைக்­க­ளங்­களைச் சேர்ந்த பணி­யா­ளர்கள் பணிக்கு செல்­ல­மு­டி­யாத நிலையை நேற்று திங்­கட்­கி­ழமை எதிர்­கொண்­டனர்.

 விசா மற்றும் கட­வுச்­சீட்டு  செயற்­கி­ர­மங்­களும்  இதனால் தாமதத்தை  எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும்  தேசிய பாதுகாப்,பு தபால் சேவை,  விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு,  சில மருத்துவ சேவைகள்,  அனர்த்த உதவி, சிறைச்சாலைகள், வரி மற்றும் மின் உற்பத்தி துறைகள்  .மேற்படி ஸ்தம்பித நிலையின் மத்தியிலும் வழமை போன்று செயற்பட்டன.