மத்­திய வங்கி மோசடி தொடர்பில் பிர­தமர் மீதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் பழி­சு­மத்­தி­விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தப்­பிக்க முயல்­கின்றார். எனினும் இந்த மோச­டி­யுடன் ஜனா­தி­ப­திக்கும் நேரடி தொடர்பு உள்­ளது. அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் நிய­ம­னங்­களை ஜனா­தி­ப­தியே செய்தார். ஆகவே ஜனா­தி­ப­தி­யினால் தப்­பிக்க முடி­யாது. இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று இருக்­கின்­றது என்று   முன்னாள் வெ ளிவி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜீ.எல் பீரிஸ் தெரி­வித்தார்.

Image result for ஜீ.எல் பீரிஸ்

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருக்கும் வரை சுயா­தீன விசா­ர­ணை­யொன்றை எதிர்­பார்க்க முடி­யாது. மேலும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான சட்ட நட­வ­டிக்­கையும் கன­வா­கவே மாறும். ஆகவே தற்­கா­லி­க­மாக பிர­த­மரை பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பத்­த­ர­முல்லை நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும குறிப்­பி­டு­கையில்,

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் வந்­த­வுடன் அதனை மூடி மறைப்­ப­தற்கு பிர­தமர் முயற்சி செய்தார். இதன்­படி சிறி­கொத்­தாவில் உள்ள சட்­ட­த­ர­ணிகள் கொண்ட குழு­வொன்றை அமைத்து விசா­ரணை செய்தார். இவ்­வாறு விசா­ரணை செய்­த­வர்­க­ளுக்கு மத்­திய வங்கி விட­யங்கள் தொடர்பில் போதி­ய­ளவு அறிவு இல்லை. எனினும் இந்த குழு­வினை அமைத்து மோச­டியை மூடி மறைக்க முயற்சி செய்தார். 

தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மத்­திய வங்­கியில் மோச­டிகள் நடை­பெற்­றுள்­ள­தாக கூறி­னாலும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துக்­களை ஒப்­பிட்டு பார்க்கும் போது பல வித்­தி­யா­சங்கள் உள்­ளன. பாரா­ளு­மன்­றத்தில் கம்­பீ­ர­மான முறையில் மத்­திய வங்­கியில் மோசடி நடக்­க­வில்லை என்றும் ஊட­கங்கள் அர­சாங்­கத்தை குழப்­ப­வ­தா­கவும் கூறி­ய­துடன் ஊட­கங்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலும் விடுத்தார். ஆனால் தற்­போது அவரின் கருத்­து­களில் பெரு­ம­ளவில்  வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதன்­ஊ­டாக இந்த மோச­டி­களை மூடி மறைக்­கவே பிர­தமர் முயற்­சித்தார் என்­பது தெட்ட தெளி­வாக விளங்­கு­கின்­றது.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வியில் இருக்கும் வரைக்கும் மத்­திய வங்கி பிணை­முறி விசா­ர­ணையில் சுயா­தீன தன்­மையை எதிர்­பார்க்க முடி­யாது.  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்  அறிக்கை பிர­காரம் நீதி­யான விசா­ர­ணை­யொன்று நடக்கும் என எதிர்­பார்த்தால் அது கன­வா­கவே அமையும். 

 மத்­திய வங்கி மோசடி விவ­கா­ரத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மீதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் சுமத்­தி­விட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தப்­பிக்க முயல்­கின்றார். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வாக்­கு­களை சூறை­யாடும் வகையில் ஆக்­ரோ­ஷ­மான கருத்­து­களை ஜனா­தி­பதி தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் ஜனா­தி­ப­தியும் மத்­திய வங்கி மோச­டி­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்ளார். ஏனெனில் சிங்­கப்பூர் பிரஜை என்று அறிந்தும் அர்­ஜூன மகேந்­தி­ரனை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக ஜனா­தி­ப­தியே நிய­மித்தார். 

வர்த்­த­கத்­துடன் தொடர்­புப்­பட்­டவர் என அறிந்து கொண்டும் ரவி கரு­ணா­நா­யக்­கவை நிதி அமைச்­ச­ராக நிய­மித்­ததும் அவ­ரே­யாகும். மேலும் பிர­த­மரை காப்­பாற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைத்தார். எனவே இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து விட்டு தற்­போது ஒன்றும் தெரி­யா­தது போன்றும் தன்­னு­டைய அதி­ருப்­திக்கு அப்பால் சென்றே நிதி அமைச்சர் மற்றும் மத்­திய வங்கி ஆளுநர் நிய­ம­னங்கள் நடந்­த­தா­கவும் ஜனா­தி­பதி கூறு­கின்றார். 

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறந்த நாட­கத்தை அரங்­கேற்­று­கின்றார். ஆகவே இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாக்­கு­களை பெற்றே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்தார். ஆகவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பயந்தே ஜனா­தி­பதி செயற்­பட்டு வரு­கின்றார். 

அத்­துடன் அர்ஜூன் அலோ­சி­ய­ஸூடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது. எனினும் அது தொடர்பில் ஜனா­தி­பதி எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அவ்­வாறு எடுத்­தி­ருந்தால் சிறந்த முன்­னு­தா­ர­ண­மாக அமைந்­தி­ருக்கும். 

 தற்­போது ஜனா­தி­ப­தியின் வாள் எங்கே?. ஜனா­தி­பதி எடுப்­ப­தாக கூறிய நட­வ­டிக்கை எங்கே? இவை­ய­னைத்தும் நாட­க­மாகும். எனவே மத்­திய வங்கி குற்­ற­வா­ளி­களை நாம் தப்­பிக்க விட­மாட்டோம். எனவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்வை தற்­கா­லி­க­மாக நீக்க வேண்டும்.

அதே­போன்று மூன்று வரு­டங்கள் தான் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவில்லை என்றும் இனிமேல் நானே பொருளாதாரத்தை வழிநடத்துவேன் என்றும்  கூறியுள்ளார். அவ்வாறாயின் இவ்வளவு நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஜனாதிபதி என்ன செய்தார். இதுவரை காலம் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு கூறியதில்லை. உலக வரலாற்றில் இவ்வாறான ஜனாதிபதி இவர் மாத்திரமேயாகும். இவ்வாறான கருத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது அது முற்றிலும் அரசியலமைப்புக்கும் முரணாகும். நிறைவேற்று அதிகாரத்துக்கும் முரணாகும். இவ்வாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்றார்.