மத்­திய வங்கி விவகாரம் : உண்மையான கள்ளர்கள் யார்.?

Published By: Robert

23 Jan, 2018 | 10:22 AM
image

மத்­திய வங்கி பிணை­ முறி அறிக்­கையில் எந்த பக்­கங்­க ளும் மறைக்­கப்­ப­ட­வில்லை. ஆணைக்­குழு சரி­யாக தமது அறிக்­கை­யை வழங்­கி­யுள்­ள­துடன் முழு­மை­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­தது.

 ரவி கரு­ணா­நா­யக எம்.பி விசேட உரை நிகழ்த்­தியும் எந்தப் பயனும் இல்லை. கள்­ளர்கள் யார் என்­பது மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் முக்­கி­யஸ்தர் அமைச்சர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்­கையில் பக்­கங்­களை மறைத்­துள்­ள­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு பொய்­யா­னது. ஜனா­தி­பதி ஆணைக்­குழு தயா­ரித்த அறிக்­கையின் சகல பிர­தி­களும் முழு­மை­யாக பாரா­ளு­மன்­றத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளன. பாரா­ளு­மன்ற இணை­ய­த­ளத்­திலும் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் அறிக்கை பொய்­யா­னது எனக் கூறவோ அல்­லது மறைக்­கப்­பட்­ட­தாக கூறவோ முடி­யாது. அத்­துடன் ஜனா­தி­பதி ஆணைக்­குழு மிகச் சரி­யாக தமது கட­மை­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கார­ணிகள், சாட்­சி­யங்கள் என்­பன அனைத்­துமே மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். அவ்­வாறு இருக்­கையில் அறிக்­கை­யினை  முழு­மை­யாக வாசிக்­காத நபர்கள் மூல­மாக முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்­டிய  அவ­சியம் இல்லை. 

  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூல­மாக குறித்த விட­யங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சட்ட ரீதியில் சரி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது.  பார­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக எதோ விசேட உரை நிகழ்த்தி இந்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். அவர் கூறும் உரை என்­ன­வென்­பது எமக்கு தெரி­யாது. எவ்­வாறு முன்­வைத்­தாலும் அதில் பிர­யோ­ச­னமும் இல்லை. அவர் எதைக் கூறினாலும் அதனால் மக்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிகொள்ளப்போவதில்லை. உண்மையான கள்ளர்கள் யார் என்பது அனைவருக்குமே தெரியும். மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். ஆகவே மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50