தமிழில் இசைக்கப்பட்ட பொலிஸ் கீதம்

Published By: Priyatharshan

22 Jan, 2018 | 07:58 PM
image

(இரோஷா வேலு)

இலங்கை பொலிஸ் கீதம் பொலிஸ் மா அதிபரின் முன்னிலையில் தமிழ் மொழியில் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்டுள்ளது. 

151 வருட இலங்கை பொலிஸ் வரலாற்றில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் திட்டத்தின் கீழ் பொலிஸ் கீதம் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

151 வருட வரலாற்றை கொண்ட இலங்கை பொலிஸ் திணைக்களம் தமக்கென ஓர் பொலிஸ் கீதத்தை அண்மையிலேயே இயற்றியுள்ளது. 

அந்த வகையில் இந்த பொலிஸ் கீதமானது வடக்கு மற்றும் கிழக்கு பிதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் மனதைதொடும் வகையில் கந்தப்பு ஜெயந்தனால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் பொலிஸ் கீதம் தமிழ் இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனால் இசைக்கப்பட்டு, இதன் இருவெட்டு ஒன்றும் கடந்த 20 ஆம் திகதி வவுனியா பொலிஸ் கட்டடத்தொகுதியில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனுடன், அன்றையதினம் முல்லைத்தீவு புதிய பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியின் அடிகல் நாட்டும் நிகழ்வின் போது அக்கீதம் முதன்முறையாக இசைக்கப்பட்டது. 

இந்த வைபவத்தில் வன்னி பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பல்லின மக்கள் செறிந்து வாழும் இந்நாட்டில் இன, மத பாகுபடின்றி அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு சேவை வழங்கும் பொலிஸ் திணைக்களத்தில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் கீதம் தமிழில் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58