தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் இடம்பெற்றவுள்ள 3 ஆவது டெஸ்ட்  போட்டிக்கு ரஹானேக்கு வாய்ப்பளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்குமிடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் இடம்பெற்ற முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில் 135 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை 24 ஆம் திகதி ஜோகன்ஸ்பேர்க்கில் ஆரம்பமாகின்றது. 

முதலிரு  டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரஹானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.