விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முதல் போட்டியான மரதன் ஓட்டப்போட்டி (ஆண்/ பெண்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி நுவரெலிய கொல்ப் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது மார்ச் மாதம் 15 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள ஆசிய மரதன் ஓட்டப்போட்டி மற்றும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தெற்காசிய மரதன் ஓட்டப்போட்டிகளுக்கான வீர, வீரங்கணைகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.