இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.