பாலை மரங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற நபரொருவரை மடுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மன்னார், மடுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  இரண்டாம் கட்டைப் பகுதியில் வைத்தே குறித்த நபர் பாலை மரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மடுப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலினடிப்படையிலேயே நேற்று மாலை குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மடுப்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.