மொனராகலை தமிழ் மகா வித்தியாலய, இடைநிலைப் பாடசாலைக்கு 2018 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மொனராகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் கே.யோகேஸ்வரன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை ஊவா தமிழ் அறவாரியம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.