தாய்லாந்தின் யால மாகாணத்திலுள்ள சந்தையில் இன்று இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளுடன் பொருத்தி வைக்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லையெனவும் கூறியுள்ளனர்.