மும்­பையில் கடந்த 6 மாதங்­க­ளாக பொது­மக்­களை தொந்­த­ரவு செய்­து­வந்த குரங்கு ஒன்­றினை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மும்­பையின் மத்­திய பகு­தியில் கடந்த 6 மாதங்­க­ளாக சில குரங்­குகள் உணவை திருடி வந்­துள்­ளன. இதை­ய­டுத்து அப் பகுதி மக்கள் அந்த குரங்­கு­களை விரட்ட பல்­வேறு முயற்­சி­களை கையாண்டும் எவ்­வித பலனும் ஏற்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் கடந்த வெள்­ளி­யன்று அந்த குரங்­கு­களில் ஒன்று மட்டும் தனி­யாக வந்­துள்­ளது. அப்­போது அப்­ப­குதி மக்கள் தொழில்­முறை குரங்கு பிடிக்கும் நபரை வர­வ­ழைத்­துள்­ளனர். அவர் நீண்ட போராட்­டத்­திற்கு பின்னர் குரங்கை பிடித்­துள்ளார்.

இதை­ய­டுத்து அந்த குரங்கின் கை, கால்­களை கயிற்றால் கட்டி வைத்­துள்­ளனர். பின் பொலி­ஸா­ரிடம் குரங்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. பொலிஸார் அந்த குரங்கின் கை மற்றும் கால்­களில் கட்­டப்­பட்­டி­ருந்த கயி­று­களை கழற்­றி­விட்டு கூண்டு ஒன்­றுக்குள் அதனை அடைத்­துள்­ளனர்.அந்த குரங்கு வடக்கு மும்­பையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.