உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. 

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் நான்கு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்றி எழுபத்தாறு பேர் வாக்களிப்பதற்கான தகுதி பெற்றுள்ளனர்.

இன்று ஆரம்பமாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பில் பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட செயலக தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

அடுத்த கட்ட தாபல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.