சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வருவதற்காரணமாக கொழும்பிலுள்ள சில வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கொழும்பு - கோட்டை மத்திய வீதி வரை , பிற்பகல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

களனி பாலம் , பேஸ்லைன் வீதி , ஒருகொடவத்தை சந்தி , பொரளை சந்தி , டீ.எஸ் சேனாநாயக்க சந்தி , மல் வீதி சந்தி , லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி முகத்திடல் சுற்றுவட்டம் , காலி முகத்திடல் மத்திய வீதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று பிற்பகல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/29731