இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்கும் காரைக்கால் மீன­வர்­களை விடு­விக்க  வேண்டும் என    வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரா­ஜிடம்  கண்ணீர் விட்டு கதறி அழு­த­ப­டியே  மீன­வர்­களின் குடும்­பத்­தினர் மனு­கொ­டுத்­துள்­ளனர். 

Image result for மீன­வர்­ virakesari

காரைக்­காலில் 'பாஸ்போர்ட்' (கட­வுச்­சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்­விற்கு வந்த மத்­திய வெளி­யு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்­சித்தார். அப்­போது திடீ­ரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்­து­கொண்­டனர்.

தீபா­வ­ளிக்கு முன்பு கட­லுக்கு மீன்­பி­டிக்க சென்ற காரைக்­காலை சேர்ந்த 10 மீன­வர்­களை இலங்கை கடற்­படை கைது செய்து சிறையில் அடைத்­தது அவர்­களை மீட்­க­வேண்டும். இது­போன்ற கைது சம்­பவம் இனி நடக்­காமல் இருக்க வழி­வகை செய்ய வேண்டும். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காரைக்­கால்­மேடு பகு­தியைச் சேர்ந்த 6 இளம் வயது மீன­வர்­களை, போதைப்பொருள் கடத்­தி­ய­தாக பொய்­யான குற்­றச்­சாட்டை கூறி இலங்கை கடற்­ப­டை­யினர் கைது செய்து சிறை­வைத்­துள்­ளனர்.  அவர்­க­ளையும் விடு­விக்­க­வேண்டும் என கோரிக்­கை­யுடன் கூடிய மனு­வைக்­கொ­டுத்து கதறி அழு­தனர்.

நிகழ்ச்­சியில் மீன­வர்களை சந்­தித்­தது திட்­ட­மி­டாத வகையில் திடீ­ரென ஏற்­பட்­டதால், அவர்­க­ளது அழு­கு­ர­லுக்கு நடுவில் பதில் எதுவும் கூற­மு­டி­யாமல் சற்று நேரம் அமை­தி­காத்து நின்ற மத்­திய அமைச்சர்  பின்னர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக கூறி­விட்டு சென்றார்.