25 வீத பெண் பிரதிநிதித்துவம் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

Published By: Robert

22 Jan, 2018 | 10:49 AM
image

எமது நாட்டில் மூன்றில் ஒருபங்கு குடும்பங்கள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங் களாகும். அவர்களது பாதுகாப்பு, பொரு ளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அவர்களை அபிவிருத்திக்கு பங்காற்றச் செய்ய வேண்டும்  என்று கொழும்பு  மாநகர சபையின்  ஐக்கிய தேசிய கட்சியின்  மேயர் வேட்பாளர்  ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.  

 உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதபெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது நாம்பெற்ற வெற்றியாகும். பெண்கள் இப்போது அரசியலில் பிரவேசிப்பதற்கு அச்சம்  கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் மேற்கண்டவாறு   தெரிவித்தார். செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி:–ஐக்கிய தேசியக்கட்சி உங்களை கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக பெயரிட்டுள்ளது. நீண்டகாலமாக கொழும்பு மாநகரை ஐக்கிய தேசியக் கட்சியே நிர்வகித்து வந்துள்ளது. நீங்கள் எவ்வாறு கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யவுள்ளீர்கள்?

பதில்:கொழும்பு எமது நாட்டின் பிரதான பொருளாதார மத்திய நிலையம்.எமது நகரின் குடிமக்களுக்கும் இலட்சக் கணக்காக கொழும்பில் தங்கியுள்ள குடிமக்களுக்கும் நாங்கள் சேவையாற்று கின்றோம்.

உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான பல்வேறு வாழ்க்கை மட்டத்திலுள்ள மக்களுக்காக, ஊழலற்ற சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப் படுத்தக்கூடிய நீதியான சமூக, பொரு ளாதார திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.

சக்திமிக்க சுற்றாடலுடன் முன்மாதிரி யான பொருளாதாரம் எமக்குத் தேவை.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப் படுத்தி, போக்குவரத்து நேரத்தைக் குறைப்பதன் மூலம், மிகுந்த பயன்மிக்க பொருளாதார முறையை நகரில் ஏற்படு த்துவதால் நாட்டின் ஒட்டுமொத்த பொரு ளாதாரமும் வளர்ச்சியடையும்.

துறைமுகநகரம் எமக்கு ஒரு புதிய சொத்தாகும்.  அதேபோல் மீதொட்ட முல்லகுப்பை பிரச்சினை ஒரு பாரியசிக்கலாக உருவெடுத்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற சிறந்த சுற்றாடலுடன் கூடிய திட்டங்களுடன் பொருளாதார மத்திய நிலையமாக கொழும்பு நகரை மாற்றியமைக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் கூறிய வாறு அதிகவருமானம் பெறுபவர்கள், குறைந்தவருமானம்  பெற்று குறைந்தவசதிகளுடன் வாழும் பல்வேறுவகையான மக்கள் சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடியவகையிலான திட்டங்கள் இருக்கின்றதா?

பதில்:சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் மலசலகூட வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைப்பது பிரதான பிரச்சினையாகவுள்ளது.

குறைந்தவருமானம் பெறும் வீடு இருக்கும்,வீடு இல்லாத மக்களுக்காக ரணசிங்க பிரேமதாச நடைமுறைப் படுத்திய நகர வீடமைப்புத் திட்டத்தை நான் மீண்டும் ஆரம்பித்து நடைமுறைப் படுத்துவேன்.

வீடமைப்புமற்றும் நிர்மாணத் துறை, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சும் இதற்குபங்களிப்பு வழங்கும்.

துன்பம் மற்றும் பிரச்சினைகளுடன் வாழும் அவர்களை மீட்டெடுப்பது எனது பொறுப்பாகும்.பரபரப்பான வாழ்க்கை நடத்தும் கொழும்பு நகரவாசிகளை மிகவும் துரிதமான, நவீனதொழில்நுட்ப அறிவுபெறச்செய்யவேண்டும்.அதே 

போல் அதிகாரிகளையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தொழில் நுட்பத் துடன் கூடியமுறையான நகரை கட்டியெழுப்பவேண்டும்.  

பிள்ளைகளுக்கு நவீனதொழில் நுட்பக் கல்வியை வழங்குவதுஎதிர்காலத்துக்கானமுதலீடாகும். பிரதமரின் கொள்கைகளால் இந்தநோக்கத்தைபூர்த்திசெய்வதுஎனதுஎதிர்பார்ப்பாகும்.  உயர் மற்றும் கீழ்மட்டங்களைஅப்போதுஒன்றிணைக்கமுடியும்.

கேள்வி:கொழும்பு குறித்த உங்களது திட்டங்கள் எந்த பிரிவு களுக்கு நடைமுறைப்படுத்தப் படும்?

பதில்:சுத்தத்துக்கே முதலிடம். குப்பைப் பிரச்சினை பூதாகரமாகவுள்ளது. தற்போது இடம்பெற்றுள்ள வேலைகள் போதுமானதாக இல்லை. மீள்சுழற்சிமுறை,கல்வி மூலம் அறிவுறுத்துவது போன்றவிடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த எதிர்பார்க்கின்றேன். மீதொட்ட முல்ல பிரச்சினையை தீர்ப்பதற்கு பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்படும். நிரந்தரமான குப்பைத் தாங்கி இனங்காணப்பட்டுள்ளது. அரசமற்றும் தனியார் துறை இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்.  

50 வருடங்கள் பழமையான மலசல மற்றும் குடிநீர்க்குழாய் தொகுதிகள், எமக்குள்ள சுமார் 300 கிலோமீற்றர் வீதிகள் போன்றன உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் மறுசீரமைக்கப்படும். இணையதளக்கொடுப்பனவு வசதிகள் மற்றும் தகவல் சேவைகள் துரிதப்படுத்தப்படும். இலத்திரனியல் நகர பஸ் சேவைகள் இவ்வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும்.

மாநகரசபையின் அனுசரணையுடன் வீட்டுக்கருகில் இயற்கைப்பசளை உற் பத்திசெய்வது மற்றும் விவசாய பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்.

டெங்குகட்டுப்படுத்தும் பிரிவை தொழில்நுட்பத்துடனும் கல்வியறிவு பூர்வமாகவும் அபிவிருத்திசெய்துகுடியிருப்பாளர்களுடன் தகவல் பரிமாற்றத்தைபரவலாக்குவது.

அரசமற்றும் தனியார்துறை இணைந்து தொழில் பயிற்சி மற்றும் பொதுசுகாதாரவசதிகளைமேம்படுத்தல் முச்சக்கர வண்டிகள் மூலம் வாழ்க்கையைக் கொண்டுநடத்தும் குடும்பங்களுக்குவிஷேட வேலைத்திட்டமொன்றுஆரம்பிக்கப்படும்.

விளையாட்டுத்திடல்,வாசிகசாலை, சனசமூகநிலையம் ஆகியவசதிகளை மேம்படுத்தல், சகலபிள்ளைகளுக்கும் ஆங்கிலக் கல்வி வழங்குவது குறித்தும் நகர விவசாய நடவடிக்கைகள் குறித்தும் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.                                                

கேள்வி: பெண்களைபலம்மிக்கவர்களாக்குவதுமற்றும் அரசியலில் பங்களிப்புவழங்கச் செய்தல் தொடர்பாக நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.  இது தொடர்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?

பதில்: எமதுநாட்டிலுள்ள குடும்பங் களில் மூன்றில் ஒருபங்கு குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகும். அவர்களது பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அவர்களை அபிவிருத்திக்குபங்களிப்புச் செய்யவைக்கவேண்டும்.

பணிப்பெண்கள் துன்பங் களை அனுபவித்து வியர்வை சிந்தி அனுப்பிவைக்கும் டொலர்கள்தான் இந்த நாட்டுக்கு அதிகமான வெளிநாட்டு செலாவணியை ஈட்டித்தருகின்றது.

இதைமாற்றி சுய தொழில் செய்தல், சிறுவர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.சிறுவர்களை பாதுகாக்கும் நிலையங்களை ஆரம்பிக்கவேண்டும். கடன் வசதிகள், நிதிக்குறைபாடுகள் நீக்கப்படுவது அதற்கு உந்துசக்தியாகவிருக்கும்.

அரசசேவையில் 62 சதவீதம் பெண்கள்.இம்முறைக.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களில் அதிகமானோர் பெண்கள். பல்கலைக் கழகங்களின்நிலையும் இதுதான்.  இருந்தும் நிறைவேற்றுத் தரத்தில் சொற்பதொகையினரே இருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் 30 சதவீதபெண் பிரதிநிதித்துவத்துக்காக தனிநபர் பிரேரணையொன்றை முன்வைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காகப் பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும். இதன் பிரதி பலனாகஉள்ளூராட்சிசபைகளில் 25 சதவீதபெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது நாம் பெற்ற வெற்றியாகும்.

தேர்தலை வர்த்தகமாக்கியது, காடையர்கள் தேர்தலை முன்னெடுத்த யுகம் முடிவடைந்துவிட்டது.  பெண்கள் இப்போதுஅரசியலில் பிரவேசிப்பதற்குஅச்சம்  கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: இந்தஅரசாங்கத்துக்கு 3 வருடமாகிறது. இன்றளவில் நிறைவேற்றப்பட்டவை குறித்து திருப்தியடைகின்றீர்களா?

பதில்:கடன் பொருளாதாரம், ஊழல் மோசடிநிறைந்த அரச நிர்வாகம், மூன்று வருடங்களில் சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்புவது சிரமமான விடயமாகும். இவையனைத் துக்கும் முன்னர் முடிந்தவரை மக்களுக்கு நிவாரணங்களை  வழங்கி கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றோம்.                                   

2015 ஜனவரி மாற்றத்தின் மக்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறியுள்ளன.

நல்லாட்சி, சமத்துவம், தகவல் அறிதல் அவற்றில் சிலவாகும்.

அதிகாரப் பேராசையில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்துக்கு பதிலாக மக்களுக்கு பொறுப்புக்கூறும் 19 ஆவது திருத்தம் நிலைநிறுத்தப்பட்டது.

உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்து வதற்காக பெருந்தொகைப் பணம் வரவு-– செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நான் வகித்த சிறுவர் விவகார அமைச்சில் கர்ப்பிணித் தாய்மாருக்காக  2000 ரூபா பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது.

சகல பாடசாலை பிள்ளைகளுக்கும் இலவச காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் அபிவிருத்திக்கென 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அவற்றில் ஒருசில மாத்திரமேயாகும். எனவே அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி:கொழும்பின் முதலாவது பெண் மேயர் வேட்பாளர் நீங்கள் தானே?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி மக்களது கட்சி. மக்கள் புத்திசாலிகள். எனது அன்புக்குரிய கொழும்பு மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04