அனுராதபுரம் 7 கோடி ரூபா கொள்ளை ; திறப்பனை முக்கொலை

Published By: Robert

22 Jan, 2018 | 10:09 AM
image

அனு­ரா­த­புரம் நகரில் உள்ள பிர­தான தனியார் நிதி நிறு­வ­னத்தில் 7 கோடி ரூபா பெறு­ம­தி­யான நகை­களைக் கொள்­ளை­யிட்ட சம்­பவம் மற்றும் திறப்­பனை  முக்­கொலை தொடர்பில் பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒரு­வரை கைது செய்ய குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணைகளை ஆரம்­பித்­துள்­ளது. 

Image result for கொள்ளை virakesari

அதன்­படி மிக விரைவில் குறித்த பொலிஸ் அத்­தி­யட்சகர் கைதுசெய்­யப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

கடந்த 11 ஆம் திகதி இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் நொச்­சி­யா­கம பகு­தியைச் சேர்ந்த பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் ஒரு­வரை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் கைது செய்து நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே, அதன் பின்­ன­ரான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த கைது இடம்­பெ­ற­வுள்­ள­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த 2016 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த கொள்ளை இடம்­பெற்­றி­ருந்த நிலையில், இதன்­போது தனியார் நிதி நிறு­வ­னத்தில் இருந்த 11.5 கிலோ தங்கம் கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதன் மதிப்பு 7 கோடி ரூபா­வாகும். கொள்­ளை­யர்கள் கொள்­ளையின் பின்னர் நிறு­வ­னத்தில் இருந்த சி.சி.ரி.வி.பதி­வு­க­ளையும் உடன் எடுத்துச் சென்­றி­ருந்­தனர். இது தொடர்­பி­லான விசா­ர­ணைகளின் பின்னர் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.  இந் நிலையில் குறித்த கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் கோடீஸ்­வர வர்த்­தகர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட நிலையில், அதற்கு முன்­ன­தாக மேலும் சிலரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 

 குறித்த விசா­ர­ணை­களில், அந்த கொள்ளை இடம்­பெற்ற போது அனு­ரா­த­புரம் பகு­தியில் முக்­கிய பொறுப்பில் இருந்த குறித்த பொலிஸ் அதி­காரி (அப்­போது உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர்) தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதனை விட, அனு­ரா­த­புரம் - திறப்­பனை பகு­தியில்  முன்னாள் இரா­ணுவ வீரரும் பல்­வேறு குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வ­ரு­மான எஸ்.எப். பண்டா   உள்ளிட்ட மூவரைக் கார் ஒன்றுக்குள் சுட்டுக்கொன்றிருந்த சம்பவம் தொடர்பிலும் இதன்போது  குறித்த பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04