மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடிய அரசியல் கலாசாரத்தினால் இன்று வேறு எந்தவொரு கட்சித் தலைவருக்கும் அரசியல் மேடைக்கு வந்து தாம் தூய்மையானவர்கள் என்றோ மக்கள் சார்பானவர்களென்றோ கூறமுடியாதுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள்  மக்கள் பணத்தை களவாடவோ சூரையாடவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் மக்களுக்காக நல்ல சேவை செய்யக்கூடிய நல்ல பிரதிநதிகளை தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தவறாக வேலை செய்ய இடமளிக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் நாடுபூராகவும் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு நல்ல பயிற்சி வழங்கி நல்லவர்களாக சேவை செய்வதற்கு உதவுவேன். சமூகத்தில் வேலை செய்யும் போது மக்களிடையே அன்பு செலத்த வேண்டும்.

இந்த நாட்டில் நல்ல படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியலாளர்கள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள்,  விஞ்ஞானிகள், குறைவில்லாத வளங்கள் வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் ஏன் இந்த நாடு முன்னேறவில்லை என மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள்.

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள். 

2008 முதல் 2016 வரை மத்திய வங்கி ஊழல் மோசடியில் ஆயிரக்க கணக்கான கோடிப் பணங்களை கையாடல் செய்துள்ளார்கள். வேலை செய்யும் ஏழை மக்களின் ஊழியர் சேமலாபநிதி, வங்கிகளில் உள்ள வைப்பு, பல்லைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில், வாழ்கை வாகனக் காப்புறுதிப் பணம்  என்பவற்றை கையாடல் செய்துள்ளார்கள். 

கள்ளர்களைப் பிடிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு, அரசியல்வாதிகள் பல மேசடிகளைச் செய்து சம்பாதித்த பணம் பற்றி அறிவதற்கான ஜனதிபதி ஆணைக்குழு என இரண்டு ஆணைக்குழுக்களை கடந்த வருடம் நியமித்தேன். 

இந்த ஆணைக்குக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகள் என கூறப்பட்டிருக்கும் அனைவருக்கும் எதிராகவும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம். எந்த கட்சியைச் சார்தவர்களானாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கமாட்டோம்.

இலவச மருத்துவம், இலவச கல்வி, வீதிகள் குளங்கள் புனரமைப்பதற்காக தொழில் வாயப்புக்களை ஏற்படுத்துவதற்காக பணத்தை கையாடல் செய்துள்ளார்கள் இந்த கள்வர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்க வேண்டாம் நானும் மன்னிப்பு வழங்கவே மாட்டேன்.

இந்த நாட்டிலே சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். 

இம்முறை தேர்தலில் வேகமாக முன்னேறி வந்துள்ள கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகுமென அரசியல் சார்பற்ற ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றேன்.

இது தொடர்பாக ஆய்வு செய்த கல்விமான்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் இவ்வாறு அணிசேர்ந்திருப்பது தூய அரசியல் பயணத்திற்காகவேயாகும்.

மக்களின் சொத்துக்களை பாதுகாக்கவும் அரச திறைசேரியை பாதுகாக்கவும் அபிவிருத்தியின் பேரில் டென்டர்கள் மூலம் கொள்ளையிட்ட யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இம்முறை இடம்பெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும்.

மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடிய அரசியல் கலாசாரத்தினால் இன்று வேறு எந்தவொரு கட்சித் தலைவருக்கும் அரசியல் மேடைக்கு வந்து தாம் தூய்மையானவர்கள் என்றோ மக்கள் சார்பானவர்களென்றோ கூறமுடியாதுள்ளது. ஊழல் மோசடிகள், கள்வர்கள் இல்லாத சிறிய மனிதர்களின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பு பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் முறைமையை நிறைவுக்கு கொண்டு வரவேண்டுமானால் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பயணத்தை பலப்படுத்தி புதிய பயணத்திற்கு தயராக வேண்டும்.

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சிக்கு வாக்களிப்பதற்கு ஒருவர் நடவடிக்கை எடுப்பாராயின் அது ஊழல் மோசடிக்கும் குடும்ப ஆதிக்கத்திற்கும் ஒத்துழைத்து நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமையும்.

நான் அதிகார ஆசை கொண்ட ஒருவரோ அல்லது ஜனாதிபதி பதவியில் சதா காலமும் நிலைத்திருக்க ஆசைப்பட்டு வந்த ஒருவரோ அல்ல.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது முதல் அதிகாரத்திற்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் அரசியலமைப்பில் ஏதேனும் திருத்தங்களை கொண்டு வந்தார்கள் என்று இருந்தால், அல்லது புதிய சட்டங்களை ஆற்றினார்கள் என்றிருந்தால் அது தமது ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக மட்டுமே ஆகும்.

 பெயர் பலகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆணைக்குழுக்களை மக்கள் சார்பு ஆணைக்குழுக்களாக மாற்றினேன்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி 2020 தேர்தலில் பாராளுமன்றத்தை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும்.

இம்முறை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டிருப்பது தாய்மையை அடிப்படையாகக்கொண்ட பெண் பிரதிநிதித்துவத்தை எதிர்காலத்தில் தேசிய அரசியலில் அதிகரிப்பதற்காகவேயாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.