ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பந்த தசநாயக்கவினால் பதுளை மாவட்ட பாடசாலை ஒன்றின் அதிபருக்கு தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிடப்படும் விடயம் குறித்தும் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கேற்ப அது தொடர்பாக விரிவான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி ஊவா மாகாண ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.