பய­ணிகள் மற்றும் சார­தி­களின் பாது­காப்­புக்­கான அம்­ச­மாக காணப்­படும் ஆச­ன­பட்டி மற்றும் பாது­காப்பு பலூன் இன்­றிய வாக­னங்­களை இறக்­கு­மதி செய்­வது தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு அறி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறித்த தடை அமு­லுக்கு வரு­வ­தாக தெரி­வித்­துள்ள நிதி­ய­மைச்சு இவ் ஆண்­டுக்­கான வரவு – செலவு திட்­டத்தில் பரிந்­துரை செய்­யப்­பட்ட குறித்த யோசனை, ஜன­வரி முதலாம் திகதி முதல் நடை­மு­றைப்­ப­டுத்­த­வி­ருந்த நிலையில், வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் இறக்­கு­ம­தி­யா­ளர்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அந்த யோசனை பிற்­போ­டப்­பட்­டது.

அதற்­க­மைய எதிர்­வரும் ஜூலை முதலாம்  திக­தியின் பின்னர் இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­களில், சாரதி மற்றும் முன் ஆச­னத்தில் பய­ணிப்­ப­வ­ருக்­கான பாது­காப்பு பலூன், பூட்­டு­வதை தடுக்கும் பிறேக் தொகுதி (Anti -– Locking Breaking System (ABS)) மற்றும் முற்­புற, பிற்­புற ஆச­னங்­களில் பய­ணிப்­போ­ருக்­கான மூன்று இடங்­களில் இணைக்­கப்­படும் ஆசன பட்டி (Three Point Seat Belt) காணப்­ப­டு­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அமைப்­பு­களை மீறு­கின்ற வாகனங்கள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள், உரிய நிறுவனங்களால் எதிர்வரும் நாட் களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.