பொலி­ஸா­ருக்­கான தபால் வாக்­க­ளிப்பு நாளை

Published By: Robert

21 Jan, 2018 | 10:28 AM
image

 தேர்தல் கட­மை­களில் நேர­டி­யாக ஈடு­படும் பொலி­ஸா­ருக்கும் மாவட்ட தேர்தல் அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கு­மான தபால் மூல வாக்­க­ளிப்பு நாளை 22 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெ­று­மென மேல­திக தேர்தல் ஆணை­யாளர் எம்.எம்.மொஹம்மட் தெரி­வித்தார்.  

 ஏனைய அரச ஊழி­யர்­க­ளுக்­கான தபால்­மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் 25 ஆம், 26 ஆம் திக­தி­களில் நடை­பெ­று­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.    இம் முறை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக 5 இலட்­சத்து 60 ஆயி­ரத்து 536 அரச பணி­யா­ளர்கள் தகுதி பெற்­றுள்­ளனர். தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக சுமார் 6 இலட்சம் விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­ற­தா­கவும், அவற்றில் கணி­ச­மா­னவை முறை­யாக பூர்த்தி செய்­யப்­ப­டாமை உள்­ளிட்ட கார­ணங்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் ஆணை­யகம் தெரி­வித்­துள்­ளது.   

மேலும் குரு­ணாகல் மாவட்­டத்தில் தபால் மூல வாக்­கா­ளர்கள் தொகை 67 ஆயி­ர­மாக பதி­வா­கி­யுள்­ளது. இதற்கு அடுத்­த­ப­டி­யாக கண்டி மாவட்­டத்தில் 48 ஆயிரம் பேரும், அநு­ரா­த­புர மாவட்­டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33