மலை­யக ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளது நிய­மனம், சம்­பளம் என்­பன தொடர்பில் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் கல்வி அமைச்­சி­ட­மி­ருந்து ஜன­வரி மாத இறு­திக்குள் கிடைக்­கு­மானால், அதற்கு கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு நாம் தேர்­தலில் வாக்­க­ளிக்க முடியும் என்று ஆசி­ரியர் உத­வி­யா­ளர்கள் சார்பில் ஆர்.ஜீ.கிருஷ்ணா தெரி­வித்­துள்ளார்.

மலை­யக ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளாக சுமார் 3000 பேர் நிய­மனம் பெற்­றனர்.இவர்­களில் அதி­க­மா­ன­வர்கள் தற்­போது, அட்­டா­ளைச்­சேனை அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை மற்றும் நாட­ளா­விய ரீதியில் உள்ள ஆசி­ரியர் கலா­சா­லை­களில் பயிற்சி பெற்று வரு­கின்­றனர். இவர்கள் தங்­க­ளது நிய­மனம், சம்­பளம் தொடர்பில் அண்­மையில் தொழிற்­சங்கப் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

அவர் மேலும் தெரி­விக்­கையில், மலை­யக ஆசி­ரியர் உத­வி­யா­ளர்கள், மலை­யக அர­சி­யல் ­வா­தி­க­ளினால்  கைவி­டப்­பட்ட நிலையில், தங்­க­ளது பொறுப்­புக்­க­ளையும், கட­மை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­களின் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. அவர்­களின் தேவை­களை நிறை­வேற்­று­மாறு ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால், கல்வி அமைச்­சுக்கு கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­ட­துடன், அதன் பிர­தியும் எமக்கு வழங்­கப்­பட்­டது. ஆனால், அதற்­கான பதில் எதுவும் இது­வரை கிடைக்­க­வில்லை. 

இலங்கை ஆசி­ரியர் சேவை சங்­கத்தின் ஆத­ர­வோடு, கல்வி அமைச்­சுக்கு முன்னால் எமது நியா­ய­மான கோரிக்­கை­யினை முன்­வைத்தோம். இதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் எதுவும் இது­வரை கிடைக்­க­வில்லை. இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் வினா­வெ­ழுப்­பிய போதிலும் பதில் கிடைக்­க­வில்லை. 

மலை­ய­கத்­திற்­கான ஒரு பொது குழு அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அதில் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளது பிரச்­சினை ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. இவ்­வா­றான நிலையில், ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளா­கிய நாம், பிராந்­தி­யத்தில்தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்­க­ளுக்கு, எவ்வாறு வாக்கினை வழங்க முடியும் என்பதனை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்.  ஆகையால், ஜனவரி மாத இறுதிக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் கிடைக்குமானால், அதற்கு காரணமானவர்களுக்கு வாக்களிக்க முடியும்  என்றார்.