நடவடிக்கை இன்றேல் வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Published By: Devika

21 Jan, 2018 | 09:49 AM
image

தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தாம் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் அனுமதிக்க மறுத்ததற்காக, பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வரவழைத்து தன் முன் மண்டியிடச் செய்தார் என்று புகார் எழுந்தது.

முதலில் ஆர்.பவானி மறுத்தபோதிலும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலையீட்டையடுத்து, நடந்த உண்மைகளை அதிபர் வெட்டவெளிச்சமாக்கியிருந்தார். பயமுறுத்தலின் பேரிலேயே தாம் முதலில் பொய் கூறப் பணிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, அதிபர் மீது பொலிஸில் புகாரளித்துள்ள முதலமைச்சர், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும் உண்மையை மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை, கல்வித் துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்றும் தனக்கு நேர்ந்த கதி மற்றொரு அதிபருக்கோ, ஆசிரியருக்கோ நேர்ந்துவிடக் கூடாது என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

அதிபர் என்ற முறையில் மட்டுமன்றி, ஒரு பெண்ணை அகௌரவப்படுத்திய முதலமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் அதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களினது கௌரவத்தையும் உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59