கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் உள்ள 66வது படையணித் தலைமையகத்தில் சேவையாற்றி வரும் இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

தன்வசமிருந்த ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ள அவர் முயன்றார். எனினும், துப்பாக்கிச் சன்னம் எப்படியோ அவரது இடது காலில் பட்டு காயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற சக இராணுவ வீரர்கள், அவரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சைகளுக்காக அனுமதித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.