கஞ்சா பயிரிடப்பட்டிருந்த பகுதியைச் சுற்றிவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.

கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், லுனுகம்வெஹர பகுதியில் ஆய்வு நடத்த பொலிஸார் சென்றிருந்தனர்.

குறித்த கஞ்சா தோட்டத்தை ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது, திடீரென அங்கு காட்டு யானைகள் நுழைந்தன.

இதனால் அதிர்ச்சியுற்ற பொலிஸார், தம்வசமிருந்த ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு உயிர்தப்ப முயன்றனர். எனினும் அதற்குள் காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.