தேவதாசி என்பது உயர்ந்த குலத்து பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை : தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து

Published By: Digital Desk 7

20 Jan, 2018 | 05:16 PM
image

ஊடகமொன்றிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்த வைரமுத்து, ஆண்டாள் குறித்து தான் புகழ்பாட விரும்பியது தவறா என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த  வைரமுத்து,

“நான் ஆண்டாளை பற்றி மட்டும் கட்டுரை எழுதவில்லை, 3,000 ஆண்டு நீண்டு பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் பெருவெளியில், தமிழுக்கு தடம் சமைத்தவர்களை இந்த இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்க ஆசைப்பட்டேன்.

தொல்காப்பியம் தொடங்கி நிகழ்கால படைப்பாளர்கள் வரை ஒரு பரந்த பார்வையில் ஆராட்சி பார்வையில் எழுதிப்பார்க்க ஆசைப்பட்டேன்.

நாயன்மார்களில் அப்பரை தேர்தெடுத்த நான் ஆழ்வார்களில் ஆண்டாளை தேர்ந்தெடுக்க ஆசைப்பட்டேன்.

40 ஆண்டுகளாக என் நெஞ்சில் குமுறியவண்ணம் உள்ள குரல் ஆண்டாளின் குரல். அவளின் பாடல்களில்  சக்தி பிறக்கிறது தமிழ் பிறக்கிறது. அந்த ஓசையில் உணர்ச்சி இருக்கிறது.

ராஜபாலையத்தில், திருவள்ளிக்குத்தூரில் அவள் பிறந்த மண்ணில் ஆண்டாளின் பெருமைகளை ரசனையோடு எடுத்துரைத்தேன்.

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த 8ஆம் நூற்றாண்டில் ஆண்டாளின் குரல் பெண்களுக்காக தனித்து ஒலித்த குரல் என்பதை எடுத்துரைத்ததேன்.

ஆண்டாளை சமூக மற்றும் சமய பார்வையில் பார்த்தேன்.  அவளின் தனிக்குரலை ஆராய்ந்து எழுதினேன். அதற்காக பல மேற்கோள்களை எடுத்துகாட்டினேன்.

அதில் ஒன்றாக தான்   86 வயதுடை பேரசிரியர் ஒருவரின் ஆண்டாள் குறித்த சமூகவியல் பார்வையில் பார்க்கப்பட்ட  கட்டுரையை எடுத்துக்காட்டினேன்.

தேவதாசி என்பது உயர்ந்த குலத்து பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை. நான் மனிதனை திருமணம் செய்ய மாட்டேன். நான் மனிதனுக்கு கட்டுப்பட்டு வாழ மாட்டேன். நான் இறைவனுக்கு அருகில் சென்று விட்டேன் என்பதே அந்த மேற்கோளின் விளக்கம்.

அந்த உயர்ந்த குரல் எப்படி வந்தது என்றால் மனித கூட்டத்தில் இருந்து விடுதலை பெற்று கடவுளை சென்ற ஒருத்தியின் குரலாக தான் அது இருக்குமோ என்பதை காட்டுவதற்காக தான் அவருடைய வரிகளை மேற்கோள் காட்டினேன்.

மூலத்தை எழுதியவர்களே குற்றமற்றவர்கள் என்றால் மேற்கோள் காட்டிய நான் கொச்சைப்படுத்தி விட்டேனா.

ஆண்டாள் எனது தாய், அவள் தமிழிச்சி. ஆண்டாளை குற்றம் சுமத்துவதாயின் அவளின் சொந்த இடத்திற்கு சென்று பேசியிருப்பேனா.

இவ்வாறு இருக்கையில் மத அரசியலுக்காக என்னை வைத்து எனது கருத்துக்களை திணித்து பரப்பி விட்டார்கள்.

இப்படிப்பட்டவர்கள் முன் நான் தமிழ் வளர்க்க வேண்டுமே என்று வெட்கப்படுகிறேன்.” என  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37