யமுனா நகர், ஹரியானாவில் பாடசாலை அதிபரை அதே பாடசாலையில் கல்வி கற்று வந்த உயர் வகுப்பு மாணவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்தான்.

ரித்து சாப்ரா என்ற அந்தப் பெண் அதிபர் இன்று (20) காலை சுமார் 11.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றியபடி இருந்தார்.

அப்போது, விலங்குகளைக் கொல்வதற்குப் பயன்படும் துப்பாக்கியை எடுத்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன், அதிபர் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில் கடுமையாகக் காயமடைந்த அதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விடயம் பற்றிக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் குறித்த மாணவனைச் சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.