சீனாவைச் சேர்ந்த சிறுவன் குங்பூ பாணியில் தீயை அணைக்க முயன்று முயற்சி தோல்வியடைந்து  40ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள்  தீக்கிரையாகியுள்ளன.

தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்த, சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க நினைத்துள்ளான்.

தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக வாகன தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்து சினிமா பானியில் அணைக்க முயற்சித்துள்ளான்.

பல முறை முயன்றும் தனது முயற்சி பலிதமாகாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான். 

தீ பரவி வாகன தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த  40ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள்  தீக்கிரையாகியுள்ளன.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை 

சி.சி.டீவி கமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 9.5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறப்பட்டுள்ளது.