முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இறுதி யுத்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இருந்தபோதிலும் இவை இதுவரை பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.