"எந்த கொள்கையின் அடிப்படையில்  தேர்தலில் நிற்கின்றேன் என்று கூட தெரியாமல் தாங்கள் ஏதோ நீண்ட கால அரசியலில் ஈடுபட்டது போன்று பாசாங்குகள் செய்து போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற வேட்பாளர்கள் தெடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்." என தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனையில் போட்டியிடுகின்ற நகர சபை வேட்பாளர் ஏ.மெரினஸ் பேரேரா வை ஆதரித்து நேற்று  மாலை மன்னாரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

" எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் தேர்தலுக்கு தகுதியானவர்களா? என்பது தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பது அவசியமானதாகும்.

இத்தேர்தலில் போட்டியிடுகின்ற பலர் கடந்த காலங்களில் தனி மனித சுக போகங்களுக்காக அரசியல் வாதிகளுக்குப் பின்னால் திறிந்து கொண்டு நேற்று ஒருவருடன், இன்று மற்றொருவருடன், நாளை ஒருவருடன் என்றும் ஒரு மாதத்திற்கு ஒரு அரசியல் கட்சி என்றும் மூன்று மாதத்திற்கு ஒரு அரசியல் கட்சி என்று திறிந்து கொண்டு அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் பயண்படுத்தி குருக்கு வழிகளில் தாங்கள் சம்பாதிப்பதற்காக தரகர்களாக செயல் பட்டவர்கள் பலர் இங்குள்ளனர்.

தொழில் வாய்ப்பை  பெற்று தருவதாக பணம் பெற்றுக்கொண்டவர்களும், காணி பெற்று தருவதாகவும், வீடு கட்டித்தரவதாகவும், சீற் பெற்றுத்தருவதாகவும் கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறித்தவர்கள் அரசியல் செல்வாக்கைப் பயண்படுத்தி பக்கத்து வீட்டு காணியை, அரச காணிகளை ஆட்டையை போட்டவர்கள், பக்கத்து வீட்டில் இறப்பு வீடு நடந்தாலும் கண்டு கொள்ளாதவர்கள், எமது பிரதேசத்தில் பொதுவான அல்லது ஊர் எந்த வித நன்மை தீமைகளிலும் கலந்து கொள்ளாதவர்கள், பொதுச் சொத்துக்களை சூரையாடியவர்கள், தற்போது தேர்தல்  வந்தவுடன் கட்சி எது? ஆக்கட்சியின் தலைவர் யார்? என்று கூட தெரியாதவர்கள், எந்த கொள்கையின் அடிப்படையில் நான் தேர்தலில்  நிற்கின்றேன் என்று கூட தெரியாமல் தாங்கள் ஏதோ நீண்ட கால அரசியலில் ஈடுபட்டது போன்று பாசாங்குகள் செய்து உள்ளூராட்சி  சபைகளுக்கான அதிகாரங்கள் கூட என்ன என்று கூட தெரியாது பொய் முகமுடியை போட்டுக்கொண்டு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள்.

தாங்கள் வெற்றி பெற்றால் நெடுஞ்சாலை போடுவார்கலாம், வீடுகள் கட்டித்தருவார்கலாம், கடல் தடைகளை நீக்குவார்கலாம், விளையாட்டு கழகங்களுக்கு பஸ் வண்டிகளை பெற்றுத்தருவர்கலாம் என முடியாதவற்றை கூறி மக்களை முட்டாள்கள் என நினைத்து வாக்ககளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

மக்களே நீங்கள் இப்படிப்பட்டவர்கள் மட்டில் அவதானத்துடன் செயற்பட வேண்டியது காட்டாயம். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட நன்மை, தீமைகள்,நெருக்கடிகள், சவால்களுக்கு முகம் கொடுத்தவர்கள் யார்? இவர்களா?என்று மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக மன்னார் நகர சபைக்கு குப்பை போடுவதற்கு கூட இன்று வரை ஒரு காணி கிடையாது.கிடைக்கவில்லை.அது மட்டுமின்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மன்னார் நகர சபை கட்டிடம் உள்ள இடம் பல வருடங்களாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்த போது எமது உயிர் அச்சுரூத்தல்களுக்கு மத்தியில் மீட்ட போது யாரும் உதவிக்கு வரவில்லை.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு பின்னால் உள்ள சாவக்காட்டு கிராமத்திற்கான காணியினை அரசியல் வதி ஒருவரும், அவருடைய வேலையாட்களும் வேலி அடைத்து பிடித்த போது சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடன் சென்று தடுத்து நிறுத்திய போது யாராவது துனை நின்றார்களா?

பழைய பஸ் டிப்போ காணியை அரசியல் வாதியினால் அபகரிக்கப்பட்ட போது நீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தினோம்.

எமிழ் நகர் விளையாட்டு மைதானத்தை அரசியல்வாதி அரசியல் நோக்கத்தோடு தாராபுரம் கொண்டு சென்ற போது அதனை தடுத்து நிறுத்த யாராவது முன் வந்தார்களா?

அதி வணக்கத்திற்குரிய மன்னார் ஆயர் மற்றும் விளையாட்டுக்கழகங்களை தவிர யாரும் உதவவில்லை.

மன்னாரில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக பள்ளிமுனை மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தந்திரமாக பள்ளிமுனை வீதி உப்புக்குளம் என கூறி உப்புக்குளம் மைதானத்தின் வேலைகளை ஆரம்பிக்கப்பட்ட போது உரிய அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பள்ளிமுனைக்கு கொண்டு சென்றவர்கள் நாங்கள்.

மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்காக நகர திட்டமிடல் அதிகாரசபை மற்றும் வேல்ட் விசன் ஆகியவற்றின் நிதிகலாக சுமார் 4 கோடி ரூபாய் கிடைத்ததும் அதனைச் செய்ய அனுமதிக்காமல் கடந்த ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களுக்காக அமைச்சர் ஒருவர் செயல்பட்டார்.

இவற்றை புரிந்து கொள்ளாமல் தமது கிராமங்களில் சிலர் தமது தனிப்பட்ட நலன்களுக்காக குறித்த அமைச்சரின் கட்சி சார் வேட்பாளர்கலாக கலமிறக்கப்பட்டு எமது வாக்குகளை கொள்ளையிடுகின்றனர்.

எனவே மக்களே நீங்கள் இதனை சிந்தித்து நிதானமாக அபிவிருத்தி மட்டுமின்றி கொள்கையுடன் கூடிய அபிவிருத்தியை எமது  நீண்டகால தமிழ் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து சரியானவர்களை இனம் கண்டு உங்கள் வாக்குகளை வழங்கி எதிர் காலத்தில் நாங்கள் சரியானதொரு மக்கள் கூட்டமைப்பை உறுவாக்கி மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றுவதற்கு உங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என்பதினை இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்." என மேலும் தெரிவித்தார்.