மன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துடன் பல உணவகங்கள் உள்ளன இந்த உணவகங்களுக்குப் பின்னால் மிகவும் அசுத்தமான சூழல் காணப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிருமிகள் பரவுவதாகவும்இ டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக உள்ளதாக மக்கள் தெரிவிப்பதோடு இது தொடர்பில் வேடிக்கை பார்க்கும் மன்னார் நகரசபை எந்த வித அக்கறையும் இன்றி செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகரசபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .