பாரி­ச­வாத பாதிப்­புக்­குள்­ளான நோயா­ளி கள் மூளை அறுவைச் சிகிச்­சை­யின்றி மீண் டும் எழுந்து நட­மா­டு­வ­தற்கு உதவும் உயிர்­மின்­னணு (பயோனிக்ஸ்) முள்­ளந்­தண்டு உப­க­ர­ண­மொன்றை அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வா­ளர்கள் வடி­வ­மைத்­துள்­ளனர்.

மேற்­படி உப­க­ர­ணத்தை உரு­வாக்கும் செயற்­கி­ரமம் பூர்த்­தி­ய­டையும் நிலையை நெருங்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விக்­டோ­ரியா மாநி­லத்­தி­லுள்ள மெல் போர்ன் ரோயல் மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 3 சென்­ரி­மீற்றர் நீளமும் ஒரு சில மில்­லி­மீற்றர் அக­ல­மு­மு­டைய இந்த புரட்­சி­கர மின்­னணு முள்­ளந்­தண்டு உப­ க­ரணம் பாரி­ச­வாத நோயால் பாதிக்­கப்­ப ட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு வர ப்­பி­ர­சா­த­மாக அமையும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாரி­ச­வாத பாதிப்பின் போது முள்­ளந்­தண்டு பாதிக்­கப்­ப­டு­வதால் மூளையின் கட் ­ட­ளை­களை கடத்த முடி­யாமை கார­ண­மா­கவே உடல் இயக்­கங்கள் செய­லி­ழக்­கின்­றன.

இந்த உப­க­ரணம் முள்­ளந்­தண்டில் மூளையில் தசை­களின் இயக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் பகு­திக்குச் செல்லும் குருதிக் ­க­லன்­க­ளுக்குள் பொருத்­தப்­படும். இந்­நி­லையில் அந்த நுண் உப­க­ர­ணத்­தி­லுள்ள மின்­வாய்கள் மூளை­யி­லி­ருந்து சமிக் ஞைகளைப் பெற்று அவற்றை நோயாளியின் தோளில் பொருத் தப்படும் உபகரணத்துக்கு கடத்துகிறது. அந்த உபகரணம் மேற்படி சமிக்ஞைகளை கட்டளைகளாக மாற்றி அவயவங்கள் செய ற்பட வழிவகை செய்கிறது.