வருடாந்த களனி விகாரை பெரஹரா உற்சவம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, வீதிப் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு - பியகம வீதியில் போக்குவரத்துக்கள் குறித்த தினங்களில், குறித்த நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.

இன்று இருபதாம் திகதியும் 23 மற்றும் 27ஆம் திகதிகளிலும் மேற்படி வீதியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதை அனுசரித்து வாகன சாரதிகள் தமது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளும்படி போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.