வில்பத்து வனப்பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குழுவொன்று மணல் அள்ளிச் செல்வதாக வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோர வள முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றின் அனுமதி பெற்றே தாம் மணல் அகழ்வதாக, போலி ஆவணங்களைக் காண்பித்து மேற்படி நபர்கள் மணல் அள்ளிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனவும் தடுக்கப்படவேண்டியவை எனவும் வலியுறுத்தியிருக்கும் வனத்துறை இயக்குனர் நாயகம், குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.