உயி­ருடன் கல்­ல­றை­யொன்­றுக்குள் புதைக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் மீட்­கப்­பட்ட சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

தாக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்த மேற்­படி நபர் கம்பொஸ் டொஸ் கொய்­ரா­கஸஸ் நக­ரி­லுள்ள மயா­னத்­தி­லுள்ள கல்­ல­றை­யொன்றில் உயி­ருடன் புதைக்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் அந்தக் கல்­ல­றையின் விளிம்பில் குருதித்துளிகள் காணப்­ப­டு­வதை அவ­தா­னித்த அந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த குடும்­ப­மொன்றின் உறுப்­பி­னர்கள் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கும் மயான ஊழி­யர்­க­ளுக்கும் அறி­வித்­தனர்

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு வந்த மீட்புப் பணி­யா­ளர்கள் கல்­ல­றையை மூடி­யி­ருந்த கொங்­கிறீட் மூடியை அகற்­றிய போது அதற்குள் படு­கா­யமடைந்த நிலையில் நப­ரொ­ருவர் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். தொடர்ந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட அந்­ந­பரின் உடல்நலம் தேறிவரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.