லங்கா வைத்­தி­ய­சா­லை­யா­னது, 2ஆவது முறை­யா­கவும் Can-Sur-Vive உடன் இணைந்து, சர்­வ­தேச புற்­றுநோய் தினத்தை முன்­னிட்டு நடத்தும் மார்­பக புற்­றுநோய் தொடர்­பான இல­வச பயிற்சிப் பட்­ட­றை­யா­னது எதிர்­வரும் 14ம் திகதி காலை 8மணிக்கு லங்கா வைத்­தி­ய­சா­லை யின்10வது மாடியில் அமைந்­துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

மேலும் இப்­ப­யிற்சிப் பட்­ட­றையில் மார்­பக புற்­று­நோ­யி­லி­ருந்து பூரண குண­ம­டைந்து உடல், உள, ஆன்­மீக, நிதி­யியல் மற்றும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து மீண்டு வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்கள் நேர­டி­யாக உங்­களைத் தொடர்­பு­கொண்டு உங்கள் நல்­வாழ்வை மேம்­ப­டுத்தும் வகையில் உங்­க­ளுக்கும் உங்கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கும் நம்­பிக்கை வழங்க காத்­தி­ருக்­கின்­றனர். இந்த பயிற்சிப் பட்­ட­றையில் மருத்­துவஆலோ­ச­கர்கள், உள­வியல் நிபு­ணர்கள், தொழில்சார் மருத்­து­வர்கள், பிசி­யோ­தெ­ர­பிஸ்ட்கள், சமூ­க­வி­ய­லா­ளர்கள், நிதி­யியல் ஆலோ­ச­கர்கள் மற்றும் மத குரு­மார்­களின் விரி­வு­ரை­களும் இடம்­பெ­ற­வுள்­ள­துடன், வாழ்­நாளில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு எப்­படி முகம்­கொ­டுக்க வேண்டும் என்­பது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

பூரண குண­ம­டைந்­த­வர்கள் பெரும்­பாலும் முற்­று­மு­ழு­வ­து­மாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் என கருதப்படுகிறார்.