காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!!!

Published By: Digital Desk 7

19 Jan, 2018 | 02:13 PM
image

மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மன்னார் - வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயதான  சென்ஜோண் குணசீலன் குருஸ் என தெரிய வந்துள்ளது.

குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை படகு ஒன்றில் மீன் பிடிக்க தனியாக கடலுக்குச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த மீனவர் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. இந் நிலையில் சக மீனவர்கள் கடலில் சென்று தேடிய போது படகு மாத்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரு தினங்கள் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இணைந்து தேடிய போதும் குறித்த மீனவர் கண்டு பிடிக்கப்படவில்லை.

இந் நிலையில் இன்று காலை கடலில் மிதந்த நிலையில் மீனவரின் சடலம் சக மீனவர்களினால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

சடலத்தை பொறுப்பேற்ற வங்காலை பொலிஸார் மன்னார் வைத்திய சலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38