மும்பையில் உள்ள ரோயல் பரோல் கட்டிடத்தின் முதலாம் மாடியில் பழமை வாய்ந்த திரைப்படத்துறை கலையகம் ஒன்றில் இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீ விபத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட  வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவர 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் தீ இதுவரை முழுமையாக அணைக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

குறித்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் கட்டடம் பழமை வாய்ந்ததோடு கலையகமும் நீண்டகாலம் மூடப்பட்டுள்ளமையினால் மின்சார கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் மும்பை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மும்பை பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர். அத்துடன் அண்மைக்காலமாக  மும்பையில் தொடர்ந்தும் தீ விபத்துக்கள் எற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.