முன்னைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நாட்டில் இன பாகுபாடு காணப்பட்டது. தற்போது அவை தகர்த்து எறியபட்டு நாட்டில் எந்த ஒரு இடத்திற்கும் ஜனாதிபதி உட்பட பிரதமரரும் அனைத்து மக்களும் சென்று வரக் கூடிய சுதந்திரம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலை தொடர வேண்டுமானால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும தழிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே. இராதாகிருஸ்ணன்.

நுவரேலியா மாவட்டம் கொட்டகலை பிரதசே சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.