இறந்துவிட்­ட­தாக அறி­விக்­கப்­பட்டு சவச்­சா­லையில் உறைகுளிரில் 15 மணி நேரம் வைக்­கப்­பட்ட குழந்தை

Published By: Raam

10 Feb, 2016 | 09:15 AM
image

இறந்துவிட்­ட­தாக மருத்­து­வர்­களால் அறி­விக்­கப்­பட்டு மலர்ச்­சா­லை­யி­லுள்ள சவச்­சா­லையில் 15 மணித்­தி­யா­லங்கள் –-12 பாகை செல்­சியஸ் அள­வான உறையவைக்கும் குளிரில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு மாதக் குழந்தை தகனம் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன் விழி­தெ­ழுந்த அதி­சய சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஸெஜியாங் மாகா­ணத்தில் ஜின்­ஹுவா நக­ரி­லுள்ள பானன் பொது மருத்­து­வ­ம­னை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஆன் ஆன் என அழைக்­கப்­படும் இந்தக் குழந்தை கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி உள்ளூர் மருத்­து­வ­ம­னை­யொன்றில் குறைப் பிர­ச­வத்தில் பிறந்­தது. பிறந்த போது அந்தக் குழந்­தையின் நிறை 49 அவுன்ஸ் மட்­டு­மே­யாகும்.

இந்­நி­லையில் மருத்­து­வ­ம­னை­யி­லுள்ள உயிர்­காப்பு உப­க­ர­ணத்தில் 23 நாட்­களைக் கழித்த அந்தக் குழந்­தை யின் உடல் நலம் திடீ­ரென மோச­ம­டைந்­த­தை­ய­டுத்து அது கடந்த 4 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை மருத்­து­வ­மனை அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட் ­டது.

அந்தக் குழந்­தையைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அது மார­டைப்­புக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்­துள்­ள­தாக அறி­விப்புச் செய்­தனர்.

மருத்­து­வர்கள் அந்தக் குழந்­தைக்­கான மர­ணச்­சான்­றி­தழை வழங்­கி­ய­தை­ய­டுத்து அதன் தந்­தை­யான லு தனது குழந்­தையை துணியால் சுற்றி பிளாஸ்டிக் பையொன்றில் வைத்து பன்னன் மலர்­ச்சா­லைக்கு கொண்டு சென்றார்.

தொடர்ந்து அன்­றைய தினம் மாலை 6 மணிக்கு அங்­குள்ள சவச்­சா­லையில் அந்தக் குழந்தை உறை குளிரில் வைக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சுமார் 1,000 யுவான் செலவில் குழந்­தையை தக னம் செய்­வ­தற்கு ஏற்­பாடுசெய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் மறுநாள் காலை 9.00 மணிக்கு மேற்­படி குழந்தை அழு­வதை அந்த சவச்­சா­லையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் செவி­ம­டுத்து அதிர்ச்­சி­ய­டைந்து அது தொடர்பில் மலர்ச்­சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை தற்போது அவசர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right