கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா இம்முறை திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 21.01.2018 திகதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

 மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெறவிருக்கும் இப் பொங்கல் விழாவிற்கு பிரதம அதிதியாக கலாநிதி ஸ்தாபகர் உலக சைவ திருச்சபை கனடா ப.அடியார் விபுலானந்தன், சிறப்பு அதிதியாக் செயற்றிட்ட தலைவர் சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம் பொன்.ஜெயரூபன், ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ந.புள்ளநாயத்தினால் இவ்விழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இவ்விழாவின் போது பலதரப்பட்ட சமயம் சார்ந்த நிகழ்வுகள், கலைநிகழ்வுகள் மற்றும் விசேட சொற்பொழிவுகள் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.