மகரகம நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மகரகம நகர சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு பக்கத்தில் ஆண் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்து.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 06 பேர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையிலேயே, இன்று உச்ச நீதிமன்றத்தினால் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்களால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.