பெண்­ணொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி, அப்­பெண்ணைக் கொலை செய்­தமை குறித்த வழக்கில், கொலைச் சந்­தேக நபரைக் குற்­ற­வா­ளி­யாகக் கண்ட நீதி­பதி, அந் நப­ருக்கு மரண தண்­டனை வழங்கி தீர்ப்பு வழங்­கினார். 

Image result for பாலியல் வல்­லு­றவு virakesari

மொன­ரா­கலை மேல் நீதி­மன்றில் நேற்று  நீதி­பதி இனோகா ரண­சிங்க முன்­னி­லையில், மேற்­படி கொலை வழக்கு விசா­ர­ணைக்­கெ­டுத்துக்கொள்­ளப்­பட்ட போதே இவ்­வாறு  தீர்ப்­பு வ­ழங்­கப்­பட்­டது. 

மொன­ரா­கலைப் பகு­தியின் குமா­ர­தொலை பெருந்­தோட்­டத்தைச் சேர்ந்த நப­ரொ­ரு­வ­ருக்கே மேற்­படி தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

குமா­ர­தொலை பெருந்­தோட்­டத்தில் கடந்த 2012ஆம் வரு­டத்தில் ஜுன் மாதம் 19ஆம் திகதி, அதேதோட்­டத்தைச் சேர்ந்த இளம் பெண்­ணொ­ருவர்  பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்­தப்­பட்டு, கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். 

இக்­கொலை குறித்து, குமா­ர­தொலை பெருந்­தோட்­டத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர் கொலைச் சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இக்­கொலை வழக்கு விசா­ர­ணையின் போது, வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில், கொலைச் சந்­தேக நபர் கொலைக் குற்றவாளியாக காணப்பட்டார். இதையடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி, அந்நபருக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.