2017 ஆம் ஆண்டு உல­க­ளா­விய ரீதியில் பாது­காப்பு அழுத்­தங்கள் அதி­க­ரித்து காணப்­பட்ட போதிலும் சுற்­று­லாத்­து­றைக்கு சிறந்த ஆண்­டாக திகழ்ந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள உலக சுற்­றுலா அமைப்பு 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 2017 ஆம் ஆண்டு 7 சத­வீத அதி­க­ரிப்பை பதிவு செய்து 1.32 பில்­லியன் சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் வரு­கையை உலக நாடுகள்  பதிவு செய்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

Image result for சுற்றுலாத்துறை virakesari

அதன்படி ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு வரு­கைத்­தந்த வெளிநாட்டு சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 8 சத­வீத வளர்ச்­சி­யுடன் 671 மில்­லி­யனை பதிவு செய்­துள்­ளது.

அதேபோல் ஆசியா மற்றும் பசுபிக் வல­யங்­க­ளுக்கு வரு­கைத்­தந்த சுற்­று­லாப்­ப­யணி­களின் எண்­ணிக்கை கடந்த 2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 6 சத­வீத வளர்ச்­சி­யுடன் 324 மில்­லி­ய­னாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் தெற்­கா­சி­யாவில் 10 சத­வீத வளர்ச்­சி­யையும்  தென் கிழக்­கா­சியா 8 சத­வீத வளர்ச்­சி­யையும்  வடக்­கி­ழக்­கா­சியா 3 சத­வீத வளர்ச்­சி­யையும் பதிவு செய்­துள்­ளன.

அமெ­ரிக்கா 2017 ஆம் ஆண்டில்  3சத­வீத வளர்ச்­சி­யுடன் 207 மில்­லியன் சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் வரு­கையை பதிவு செய்­துள்­ளது. 

மேலும் ஆபி­ரிக்க கண்­டத்தில் தற்­போது வரை உள்ள புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம்  இக்­கண்டம் 8 சத­வீத வளர்ச்­சியை பதிவு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மத்­திய கிழக்கு நாடுகள் 5 சத­வீத வளர்ச்­சி­யுடன் 58 மில்­லியன் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் வரு­கையை பதி­வு­செய்­துள்­ள­மையும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

உலக பொரு­ளாதார நெருக்­க­டி­யினால் சுற்­று­லாத்­து­றை­யா­னது கடந்த காலங்­களில் வீழ்ச்சிய­டைந்த போதிலும் கடந்த வரு­டத்தில் சுற்­று­லாத்­து­றையில் வெளியான வளர்ச்சி போக்­கா­னது 7 வரு­டங்­க­ளுக்கு பின் ஏற்­பட்ட  வளர்ச்­சி­யாக கரு­தப்­ப­டு­வ­தாக உலக சுற்­றுலா அமைப்பு மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  

அத்­துடன் 2009 ஆம் ஆண்­டுக்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்ட பொரு­ளா­தார மற்றும் நிதி நெருக்­க­டிக்கு பின்னர் உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைமை வளர்ச்சி கண்டு வரு­வதால்  இவ்­வ­ளர்ச்­சிப்­போக்கு 2018 ஆம் ஆண்­டிலும் 4%- - 5% ஆக தொடரும் என எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. 

2017 ஆம் ஆண்டில் உலகில் அதி­க­ள­வான சுற்­று­லாப்­ப­ய­ணி­களை கவர்ந்த நாடுகள் வரி­சையில் 82.6 மில்­லியன் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் வரு­கையை பதிவு செய்­துள்ள பிரான்ஸ் முத­லி­டத்தை பெற்­றுள்­ள­தாக உலக சுற்­றுலா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

மேலும் ஸ்பெயின் அமெ­ரிக்­காவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் வரு­கையில் உல­க­ளா­விய ரீதியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஸ்பெயின் கடந்த 2017 ஆம் ஆண்டு 82 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான சுற்­று­லாப்­ப­ய­ணிகள் வரு­கையை பதிவு செய்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் ஐக்­கிய அமெ­ரிக்கா தமது நாட்­டுக்கு வரு­கைத்­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்ணிக்கை விப­ரத்தை வெளி­யி­ட­வில்லை என இவ் அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அமெ­ரிக்­கா­வா­னது தமது நாட்­டுக்கு வரு­கைத்­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் புள்ளி விபர அறிக்­கையை ஜூன் மாதத்திலேயே வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த  நாடுகளான எகிப்து, டியுனீசியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் நிலவிய தீவிரவாத மற்றும் இனவாத நெருக்கடி காரணமாக இந் நாடுகளுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.