சித்திரவதைகளுக்கு எதிரான பிர கடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக் கூட்டு ஆணைக்குழு அதனைப் பூச்சிய நிலைப்படுத்தவும்  அவ்வாறான சம்பவங்களை சட்டத்தின் மூலம் விசாரித்தலை உறுதிசெய்ய வேண் டும் எனவும் கோரியுள்ளது.

Image result for ஐரோப்பிய ஒன்றியம் virakesari

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை விரைந்து   நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும்  வலியுறுத்தியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக்கு இடையிலான  கூட்டு ஆணைக்குழுவின்    21 ஆவது கூட்டத்தொடர் நேற்று  வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டதொடரானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 ஒக்டோபர் முதலாம் திகதி மற்றும் 2017 மார்ச் 23 திகதி ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தீரமானங்கள் தொடர்பிலான கருத்துகளை பகிரும் வகையிலும் அமைந்தது.

இக்கூட்டத்தொடர் குறித்து ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக் கூட்டு ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, 

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக் கூட்டு ஆணைக்குழு அதனைப் பூச்சிய நிலைப்படுத்தவும் அவ்வாறான சம்பவங்களை சட்டத்தின் மூலம் விசாரித்தலை உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கை அரசு துரித கதியில் மேற்கொண்டுள்ள பயங்கரவாத  தடுப்பு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான எதிர்பார்ப்புக்களை மீள வலியுறுத்தி கூறியுள்ளது.   பயங்கரவாத தடைச் சட்டத்தை விரைந்து   நீக்கவேண்டும் என    ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  

ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை  கூட்டு ஆணைக்குழு என்பவை கூட்டதொடரில் மேற்கொள்ளப்பட்ட  தீர்மானங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கை இணங்கியுள்ளது. அத்துடன்  இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் கிராமிய அபிவிருத்தி மற்றும் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் வழங்கி வரும் ஆதரவை வரவேற்றுள்ளது.